Sunday, 15 November 2015

ஆண்கள் முக அழகு குறிப்புகள்

மூங்கில் தோள்களோ, தேன்குழல் விரல்களோ, மாவிலைப் பாதமோ, மங்கை நீ வேதமோ... ’ எனப் பாடிய கண்ணதாசன் முதல் 'ஊதா கலரு ரிப்பன்...’ எனப் பாடிய இன்றைய கவிஞன் வரை பெண்ணழகைப் பாடாதோர் இல்லை. அழகு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற ஒரே முடிவில் எல்லோரும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆண் என்றாலே, 'தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் ’ என வீரத்துக்கு அடையாளமாகத்தான் அவனது இறுக்கமான உடல் சுட்டப்படும். ஆனால், இன்றைக்கு ஆண் அழகைக் குறிவைத்து சந்தையில் குவியும் அழகு கிரீம்களைப் பார்த்தால்... அடேங்கப்பா!

'வெள்ளைத் தோல்’ மோகத்தில், ஆணுக்கான ஃபேர்னஸ் கிரீமில் தொடங்கி, குளிப்பதற்கு முன்பு குளிப்பதற்குப் பின்பு, மழிப்பதற்கு முன்பு, மழிப்பதற்குப் பின்பு, தோலின் ஈரப்பதம் காக்க, நிறம் மங்காமல் இருக்க, முடியை வளர்க்க, முடியை வளைக்க, வியர்வை நாற்றத்தை மறைக்க... என இந்தப் பட்டியல் இப்போது நீண்டுகொண்டேபோகிறது. முடி வெட்டும் கடையில், ''நீங்க ஏன் கொஞ்சம் ஃபேஷியல் பண்ணக் கூடாது, ஃபேஸ் லைட்டா டல்லாயிருக்கே சார்?' என கட்டிங் போடும் தம்பி, நாசூக்காக மார்க்கெட்டிங் பண்ணும்போது நம்மில் பலருக்கும் 'பண்ணிப் பார்த்தால்தான் என்ன?’ என்ற நப்பாசை துளிர்விடும்.

'ஆண்பால் - பெண்பால் என இருக்கும் பால் வித்தியாசம் தோலுக்கும் உண்டா?’ என நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும். கர்ப்பப்பைக்குள் ஆண் குழந்தை ஜனிக்கும்போதே, கொஞ்சம் கூடுதல் தடித்த தோல் என ஏற்பாடு நடந்துவிடுமாம். ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், அதன் துணைச் சுரப்பு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் முதலான ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் கூட்டணியால்தான் ஆணின் தோல் பெண்ணின் தோலைவிட 25 சதவிகிதம் தடிக்கிறது. ஆணின் தோல் இயற்கையாகவே புற ஊதா கதிர் தாக்கத்தை, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றைத் தாக்குப்பிடிப்பது இதனால்தான். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால், செரமைடு, கொழுப்பு அமிலங்கள்... போன்றவை ஆணின் தோலில் கொஞ்சம் போனஸாகவே இருப்பதால், சோரியாசிஸ் முதல் அலர்ஜியில் வரும் பிற தோல்வியாதிகள் வரும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். தோலில் ஏற்படும் காயம் பெண்ணுக்கு ஆறுவதைவிட, கொஞ்சம் மெதுவாகவே ஆணுக்கு ஆறுவதற்குக் காரணமும் இந்தத் தடித்த தோல்தான்.

கொளுத்தும் வெயிலில் டை கட்டிக்கொண்டு, வடாம் வற்றல் தொடங்கி வாக்கிங் குச்சி வரை விற்கும் 'வணிகப் பெருக்கி’ ஆண் சமூகம், சாலையிலேயே சுற்றித் திரிவதால் வியர்வை நாற்றம், அரிப்பு, சொறி, சிரங்கு முதலான 88 விதமான பிரச்னைகளைப் போக்க, கிருமிநாசினி கலந்த சோப்புகளைத் தேடுவது இயல்பு. அதோடு, அப்படியே அந்த சோப்பில் TRICLOSAN சேர்க்கை இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. சோப்பிலும் பேஸ்ட்டிலும் 40 வருடக் காலமாகச் சேர்க்கப்படும் இந்த TRICLOSAN , 'அப்படி ஒண்ணும் பெரிசாப் பயன் தரலை; ஆனால் தேய்க்கிறவனுக்குப் புற்றையும், தேய்ச்சுக் கழுவிவிடப்படும் கழிவுநீர் மண்ணுக்குப் போகும்போது நுண்ணுயிர்களுக்கு ஆபத்தும் தருவதாக’ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

'அப்போ நாங்களும் நலங்கு மாவு தேய்க்கலாமா?’ என வெட்கப்படும் ஆண்களுக்கு ஒரு ரெசிப்பி. நலங்கு மாவில் கஸ்தூரி மஞ்சளுக்குப் பதிலாக கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்துத் தேயுங்கள். தோல் வறட்சி நீங்கி வழுவழுப்பாக, வாசமாக அதே சமயம் கிருமிநாசினியைப் பயன்படுத்தாமலே, தோல் வனப்பு கிட்டும்.

முகத்தில் முளைத்த முகப்பருவுக்கே கலவரம் ஆகும் இளசுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் தன் முகத்தில் இருக்கும் முகப் பருவை நோண்டினால், லேசில் ஆறாத அவன் தடித்த தோல்தன்மையால், காலம் முழுக்க முகம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதுபோல மாறிவிடும். நேற்று அரைத்த தோசை மாவில் ஃபேஷியல் செய்வது, திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப்போடுவது அல்லது அதன் எண்ணெய்யை பரு மீது பூசுவது போன்ற சின்ன மெனக்கெடல்கள், பருக்கள் இருந்த அடையாளம் இல்லாமல் அழித்துவிடும்.

கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகள் மட்டும் கன்னங்கறுப்பாவதற்கு அங்கே சேரும் அழுக்கு, வியர்வை மட்டும் காரணங்கள் அல்ல. அந்தப் பகுதியில் அதிகரிக்கும் உடல் உட்சூடும்தான் காரணம். 'நாள் இரண்டு, வாரம் இரண்டு, வருஷம் இரண்டு’ என நலவாழ்வு விதியே உண்டு. அது... தினம் இரண்டு முறை மலம் கழிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது; வருடம் இரண்டு முறை பேதி மருந்து உட்கொள்வது என்பதுதான். இதில் பேதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் மொத்தமாக மலை ஏறிவிட்டது. 'பேதியுரை’ என்பது வெறும் வயிற்றுப்போக்கு உருவாக்கும் விஷயம் அல்ல. அன்று விளக்கெண்ணெய் முதல் பல பேதியுரை மருந்துகளை, உடலின் வாத, பித்த, கப, சமநிலைக்காக வருடத்துக்கு இரு முறை மருந்தாகப் பரிந்துரைத்தனர் நம் முன்னோர்கள். உடனே பேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் கிளம்பி விடாதீர்கள். எப்போது, எதை, எப்படி, எதோடு சேர்த்து, எந்த வயதில், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. குடும்ப மருத்துவரை ஆலோசித்து உடல்வாகு, நாடி நடைக்கு ஏற்றவாறு பேதியுரை எடுத்துக்கொள்வது... இந்த கலர் மாற்றத்தைக் காணாமல் செய்துவிடும்.

முன் நெற்றி வழுக்கைக்குக் கலவரப்படுவதும், பின்மண்டை சொட்டைக்குச் சோர்ந்து போவதும் இன்றைய இளைஞனின் இன்னொரு 'தலை’யாயப் பிரச்னை. சமீபமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில் தலை வாருவது அவமானச் சின்னமாகவே மாறிவிட்டது. குளிக்காமல், தலை வாராமல் அழுக்குச் 'சென்ராயனாக’ இருந்து ஆட்டம் போட்டுவிட்டு, 'தறுதலையா இருந்தது போதும் இனி 'தல’ ஆகணும்’ என வேலைக்குச் சேர்ந்து, டீம் லீடர் கண்டிப்பில் குளிக்க, மழிக்க, தலை வார ஆரம்பித்ததும், முடிகள் சீப்பில், தலை துவட்டும் துண்டில்... என உதிர்ந்து விலகி ஓட ஆரம்பிக்கும். தலைமுடி மீது இயல்பாகவே கரிசனம் எப்போதும் வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் பெருகும் பித்தம் நீங்கும் உபாயத்தை இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆணின் உடலில் சேரும் பித்தம், அவன் தினசரி தலைக்குக் குளிப்பதிலும், எண்ணெய்க் குளியலிலும், உணவிலும்தான் நீங்க வேண்டும்.தலைமுடி கொட்டுவது என்பது, உடலில் பித்தம் கூடிவிட்டதைச் சொல்லும் உடல் மொழி. தாடி, மீசை, நெஞ்சில் முடி... என கரடி மாதிரி உடல் எல்லாம் முடி வளரும் மரபு ஆண் ஹார்மோனில் பொதிந்திருந்தாலும், டெஸ்டோஸ்டீரோனுக்கும் தலைமுடிக்கும் உள்ள தொடர்பை அரைகுறையாக இணையத்தில் படித்துவிட்டு, 'வழுக்கை வருதே... ஆண்மை குறையுதோ’ என அங்கலாய்க்கும் ஆண்கள் இப்போதும் அதிகம். முடி உதிர்வதில் எல்லாம் 'அது’ குறையாது. அதிகபட்ச உடல் சூடுதான் பிரச்னை. வறுத்த சோற்றையும் சிக்கன் 65-யையும் நள்ளிரவில் சாப்பிடுவதைக் குறைப்பதில் இருந்து அதற்கான அக்கறை ஆரம்பிக்க வேண்டும். இளவழுக்கை, இளநரை வரும் இளைஞர்கள் இனி நெல்லிக்காய் ஜூஸுக்கு மாறுவது நல்லது.

'ஒருநாள் சிரித்தேன்; மறுநாள் வெறுத்தேன் உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ எனக் காதலி டென்ஷன் ஆவதற்கு வியர்வை நாற்றமும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஓடி ஓடி உழைக்கையில், கக்கத்தில் கசியும் வியர்வையில், உச்சா போகும் உடல் பாக்டீரியாக்களால்தான் அந்த 'உவ்வே’ நாற்றம் உருவாகிறது. வியர்வையைக் குறைக்கணும்; கூடவே சேட்டை பாக்டீரியாவை நகர்த்தணும்; அப்படியான மணமூட்டி தேவையே ஒழிய, 'இதை அடிச்சிக்கிட்டீங்கனா அகில உலக அழகியும் உங்க காதலுக்கு கர்ச்சீப் போட்டு வைப்பாங்க’ டைப் விளம்பரங்களை நம்பி வீணாகக் கூடாது. பாக்டீரியாவை நகர்த்தி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இயற்கையாகவே மணத்தைக் கொடுக்கும் கோரைக்கிழங்கு, சீமை கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு மாவுக் கலவையை காலை - மாலை தேய்த்துக் குளிப்பது வியர்வை தரும் துர்நாற்றத்தைப் போக்கும்.

சிக்ஸ்பேக், சிவப்பழகு, சுருட்டை முடி, வழ வழ தோல் இவற்றைத் தாண்டி,
'பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே;
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே ’ என இன்றும் பல பெண்களின் மதிப்பீடு இருக்கிறது என்பதை ஆண்கள் மறந்துவிடக் கூடாது!


Monday, 23 March 2015

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

முடி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உங்கள் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் முடி விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் தலைவாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான சடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக முடி அடர்த்தியாக மற்றும் நீளம் இல்லாமல் இருப்பவர்கள்,ரொம்ப சொட்டையா இருப்பவர்கள், எனக்கு நல்ல தலை ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம். முதலில் அடர்த்தியான முடி உள்ளவர்கள்.

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த சடை போட்டாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான முடி தான். எண்ணெய், லோஷன் அது இதெல்லாம் இருந்தாலும் நாம் எண்ணெயின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம். மேல இருக்கும் படம் தேங்காய் எண்ணெய் போட்டு செஞ்ச சடை. அடர்த்தியா முடி – ஆனா குட்டையா முடி இருக்கவங்க , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது. அப்பறம் ரப்பர் பேண்ட் போட்டு கட்ட முடியாமயே போய்விடும். இல்லைங்க எனக்கு வழுவழுப்பான எண்ணெய்தான் வீட்டுல வாங்கித்தராங்கன்னு சொன்னா, ஏங்க, நீங்க ஐயோ பாவம். யூத்துன்னு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க கல்யாணமான பெருசுன்னு எல்லாரும் முடிவு செய்யலாம்.
நடுவில் சொட்டை சுத்தியும் முடி உள்ளவர்கள்.
இவர்களும் வழுவழுப்பான எண்ணெய்களை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. அதற்குப்பதில் சொட்டையில் கண், மூக்கு வரைந்தால், அலுவலகத்தில் பாஸை ஏமாற்றி தூங்க வசதியாயிருக்கும். நன்கு தூங்குபவர்கள் குறட்டையை தவிர்க்கவேண்டும். நான் முழு சொட்டையும் இல்ல முழு மொட்டையும் இல்ல , ஆனா தலையில பர்ஃபெக்ட் ஆன முடி வட்டம் இருக்குன்னு வருத்தப்படறீங்களா! இதற்கெல்லாம் காரணம் நீங்க சரியா வட்டத்தை மறைக்க சடை போடாததே. இந்த கீழ இருக்க டிசைன் போடுங்க அலுவலகத்தில் தூங்கவும் வசதியாக இருக்கும். முக்கியமான விஷயம் ஆண்களின் மீசை. மூக்கிற்கு கீழ் மீசை வைக்காவிட்டாலும் தலையில் பின்னால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதே போல இளைஞர்களுக்கே உள்ள எண்ணம் , வித்தியாசமாக தலைக்கு கலர் அடித்துக்கொள்வது. முடிக்கு தகுந்த மாதிரி கலர் அடித்துக் கொண்டால், உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் சிகப்பு க்கலரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்வார்கள். அதே போல ஒரு முக்கிய விஷயம், முடி விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின்பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்துவிட்டு வழக்கம்போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் முடி ஸ்டைல் தேர்வு உட்பட. நான் கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமானது தலைக்கு மேல என்ன இருக்குங்கறதை விட தலைக்கு உள்ள என்ன இருக்கு என்பதுதான்.
பின் குறிப்பு:
மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு முடி உள்ளவர்களுக்கு மட்டுமே நமது முடி அழகை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், சொட்டையாக உள்ளவர்களுக்கு விக்கை தவிர வேறு வழி இல்லை.


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்-2

தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள் தான். தேவையான பொருட்கள்: 1. தண்ணீர் – 2கப் [அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்] தண்ணீரை சேமியுங்கள். 2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது, சகோதரிகளிடமிருந்து வேண்டாம் [முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்] 5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity. கவனிக்க வேண்டியவை: ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும், இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை. 1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும் [மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.] 2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம். 3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு.. உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது. செய்முறை: அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும் ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும், இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும், ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும். உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக நுரை நீங்கும் வரை கழுவவும், ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும். எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும். ஏ. சீப்பை எடுத்து வாரவும். ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும். எப்பொழுது முகம் கழுவது நல்லது: 1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம் 2. கல்யாணமானவர்கள், காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம் கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம். 3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது 20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.