Sunday, 15 November 2015

ஆண்கள் முக அழகு குறிப்புகள்

மூங்கில் தோள்களோ, தேன்குழல் விரல்களோ, மாவிலைப் பாதமோ, மங்கை நீ வேதமோ... ’ எனப் பாடிய கண்ணதாசன் முதல் 'ஊதா கலரு ரிப்பன்...’ எனப் பாடிய இன்றைய கவிஞன் வரை பெண்ணழகைப் பாடாதோர் இல்லை. அழகு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற ஒரே முடிவில் எல்லோரும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆண் என்றாலே, 'தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் ’ என வீரத்துக்கு அடையாளமாகத்தான் அவனது இறுக்கமான உடல் சுட்டப்படும். ஆனால், இன்றைக்கு ஆண் அழகைக் குறிவைத்து சந்தையில் குவியும் அழகு கிரீம்களைப் பார்த்தால்... அடேங்கப்பா!

'வெள்ளைத் தோல்’ மோகத்தில், ஆணுக்கான ஃபேர்னஸ் கிரீமில் தொடங்கி, குளிப்பதற்கு முன்பு குளிப்பதற்குப் பின்பு, மழிப்பதற்கு முன்பு, மழிப்பதற்குப் பின்பு, தோலின் ஈரப்பதம் காக்க, நிறம் மங்காமல் இருக்க, முடியை வளர்க்க, முடியை வளைக்க, வியர்வை நாற்றத்தை மறைக்க... என இந்தப் பட்டியல் இப்போது நீண்டுகொண்டேபோகிறது. முடி வெட்டும் கடையில், ''நீங்க ஏன் கொஞ்சம் ஃபேஷியல் பண்ணக் கூடாது, ஃபேஸ் லைட்டா டல்லாயிருக்கே சார்?' என கட்டிங் போடும் தம்பி, நாசூக்காக மார்க்கெட்டிங் பண்ணும்போது நம்மில் பலருக்கும் 'பண்ணிப் பார்த்தால்தான் என்ன?’ என்ற நப்பாசை துளிர்விடும்.

'ஆண்பால் - பெண்பால் என இருக்கும் பால் வித்தியாசம் தோலுக்கும் உண்டா?’ என நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும். கர்ப்பப்பைக்குள் ஆண் குழந்தை ஜனிக்கும்போதே, கொஞ்சம் கூடுதல் தடித்த தோல் என ஏற்பாடு நடந்துவிடுமாம். ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், அதன் துணைச் சுரப்பு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் முதலான ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் கூட்டணியால்தான் ஆணின் தோல் பெண்ணின் தோலைவிட 25 சதவிகிதம் தடிக்கிறது. ஆணின் தோல் இயற்கையாகவே புற ஊதா கதிர் தாக்கத்தை, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றைத் தாக்குப்பிடிப்பது இதனால்தான். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால், செரமைடு, கொழுப்பு அமிலங்கள்... போன்றவை ஆணின் தோலில் கொஞ்சம் போனஸாகவே இருப்பதால், சோரியாசிஸ் முதல் அலர்ஜியில் வரும் பிற தோல்வியாதிகள் வரும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். தோலில் ஏற்படும் காயம் பெண்ணுக்கு ஆறுவதைவிட, கொஞ்சம் மெதுவாகவே ஆணுக்கு ஆறுவதற்குக் காரணமும் இந்தத் தடித்த தோல்தான்.

கொளுத்தும் வெயிலில் டை கட்டிக்கொண்டு, வடாம் வற்றல் தொடங்கி வாக்கிங் குச்சி வரை விற்கும் 'வணிகப் பெருக்கி’ ஆண் சமூகம், சாலையிலேயே சுற்றித் திரிவதால் வியர்வை நாற்றம், அரிப்பு, சொறி, சிரங்கு முதலான 88 விதமான பிரச்னைகளைப் போக்க, கிருமிநாசினி கலந்த சோப்புகளைத் தேடுவது இயல்பு. அதோடு, அப்படியே அந்த சோப்பில் TRICLOSAN சேர்க்கை இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. சோப்பிலும் பேஸ்ட்டிலும் 40 வருடக் காலமாகச் சேர்க்கப்படும் இந்த TRICLOSAN , 'அப்படி ஒண்ணும் பெரிசாப் பயன் தரலை; ஆனால் தேய்க்கிறவனுக்குப் புற்றையும், தேய்ச்சுக் கழுவிவிடப்படும் கழிவுநீர் மண்ணுக்குப் போகும்போது நுண்ணுயிர்களுக்கு ஆபத்தும் தருவதாக’ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

'அப்போ நாங்களும் நலங்கு மாவு தேய்க்கலாமா?’ என வெட்கப்படும் ஆண்களுக்கு ஒரு ரெசிப்பி. நலங்கு மாவில் கஸ்தூரி மஞ்சளுக்குப் பதிலாக கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்துத் தேயுங்கள். தோல் வறட்சி நீங்கி வழுவழுப்பாக, வாசமாக அதே சமயம் கிருமிநாசினியைப் பயன்படுத்தாமலே, தோல் வனப்பு கிட்டும்.

முகத்தில் முளைத்த முகப்பருவுக்கே கலவரம் ஆகும் இளசுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் தன் முகத்தில் இருக்கும் முகப் பருவை நோண்டினால், லேசில் ஆறாத அவன் தடித்த தோல்தன்மையால், காலம் முழுக்க முகம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதுபோல மாறிவிடும். நேற்று அரைத்த தோசை மாவில் ஃபேஷியல் செய்வது, திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப்போடுவது அல்லது அதன் எண்ணெய்யை பரு மீது பூசுவது போன்ற சின்ன மெனக்கெடல்கள், பருக்கள் இருந்த அடையாளம் இல்லாமல் அழித்துவிடும்.

கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகள் மட்டும் கன்னங்கறுப்பாவதற்கு அங்கே சேரும் அழுக்கு, வியர்வை மட்டும் காரணங்கள் அல்ல. அந்தப் பகுதியில் அதிகரிக்கும் உடல் உட்சூடும்தான் காரணம். 'நாள் இரண்டு, வாரம் இரண்டு, வருஷம் இரண்டு’ என நலவாழ்வு விதியே உண்டு. அது... தினம் இரண்டு முறை மலம் கழிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது; வருடம் இரண்டு முறை பேதி மருந்து உட்கொள்வது என்பதுதான். இதில் பேதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் மொத்தமாக மலை ஏறிவிட்டது. 'பேதியுரை’ என்பது வெறும் வயிற்றுப்போக்கு உருவாக்கும் விஷயம் அல்ல. அன்று விளக்கெண்ணெய் முதல் பல பேதியுரை மருந்துகளை, உடலின் வாத, பித்த, கப, சமநிலைக்காக வருடத்துக்கு இரு முறை மருந்தாகப் பரிந்துரைத்தனர் நம் முன்னோர்கள். உடனே பேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் கிளம்பி விடாதீர்கள். எப்போது, எதை, எப்படி, எதோடு சேர்த்து, எந்த வயதில், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. குடும்ப மருத்துவரை ஆலோசித்து உடல்வாகு, நாடி நடைக்கு ஏற்றவாறு பேதியுரை எடுத்துக்கொள்வது... இந்த கலர் மாற்றத்தைக் காணாமல் செய்துவிடும்.

முன் நெற்றி வழுக்கைக்குக் கலவரப்படுவதும், பின்மண்டை சொட்டைக்குச் சோர்ந்து போவதும் இன்றைய இளைஞனின் இன்னொரு 'தலை’யாயப் பிரச்னை. சமீபமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில் தலை வாருவது அவமானச் சின்னமாகவே மாறிவிட்டது. குளிக்காமல், தலை வாராமல் அழுக்குச் 'சென்ராயனாக’ இருந்து ஆட்டம் போட்டுவிட்டு, 'தறுதலையா இருந்தது போதும் இனி 'தல’ ஆகணும்’ என வேலைக்குச் சேர்ந்து, டீம் லீடர் கண்டிப்பில் குளிக்க, மழிக்க, தலை வார ஆரம்பித்ததும், முடிகள் சீப்பில், தலை துவட்டும் துண்டில்... என உதிர்ந்து விலகி ஓட ஆரம்பிக்கும். தலைமுடி மீது இயல்பாகவே கரிசனம் எப்போதும் வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் பெருகும் பித்தம் நீங்கும் உபாயத்தை இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆணின் உடலில் சேரும் பித்தம், அவன் தினசரி தலைக்குக் குளிப்பதிலும், எண்ணெய்க் குளியலிலும், உணவிலும்தான் நீங்க வேண்டும்.தலைமுடி கொட்டுவது என்பது, உடலில் பித்தம் கூடிவிட்டதைச் சொல்லும் உடல் மொழி. தாடி, மீசை, நெஞ்சில் முடி... என கரடி மாதிரி உடல் எல்லாம் முடி வளரும் மரபு ஆண் ஹார்மோனில் பொதிந்திருந்தாலும், டெஸ்டோஸ்டீரோனுக்கும் தலைமுடிக்கும் உள்ள தொடர்பை அரைகுறையாக இணையத்தில் படித்துவிட்டு, 'வழுக்கை வருதே... ஆண்மை குறையுதோ’ என அங்கலாய்க்கும் ஆண்கள் இப்போதும் அதிகம். முடி உதிர்வதில் எல்லாம் 'அது’ குறையாது. அதிகபட்ச உடல் சூடுதான் பிரச்னை. வறுத்த சோற்றையும் சிக்கன் 65-யையும் நள்ளிரவில் சாப்பிடுவதைக் குறைப்பதில் இருந்து அதற்கான அக்கறை ஆரம்பிக்க வேண்டும். இளவழுக்கை, இளநரை வரும் இளைஞர்கள் இனி நெல்லிக்காய் ஜூஸுக்கு மாறுவது நல்லது.

'ஒருநாள் சிரித்தேன்; மறுநாள் வெறுத்தேன் உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ எனக் காதலி டென்ஷன் ஆவதற்கு வியர்வை நாற்றமும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஓடி ஓடி உழைக்கையில், கக்கத்தில் கசியும் வியர்வையில், உச்சா போகும் உடல் பாக்டீரியாக்களால்தான் அந்த 'உவ்வே’ நாற்றம் உருவாகிறது. வியர்வையைக் குறைக்கணும்; கூடவே சேட்டை பாக்டீரியாவை நகர்த்தணும்; அப்படியான மணமூட்டி தேவையே ஒழிய, 'இதை அடிச்சிக்கிட்டீங்கனா அகில உலக அழகியும் உங்க காதலுக்கு கர்ச்சீப் போட்டு வைப்பாங்க’ டைப் விளம்பரங்களை நம்பி வீணாகக் கூடாது. பாக்டீரியாவை நகர்த்தி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இயற்கையாகவே மணத்தைக் கொடுக்கும் கோரைக்கிழங்கு, சீமை கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு மாவுக் கலவையை காலை - மாலை தேய்த்துக் குளிப்பது வியர்வை தரும் துர்நாற்றத்தைப் போக்கும்.

சிக்ஸ்பேக், சிவப்பழகு, சுருட்டை முடி, வழ வழ தோல் இவற்றைத் தாண்டி,
'பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே;
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே ’ என இன்றும் பல பெண்களின் மதிப்பீடு இருக்கிறது என்பதை ஆண்கள் மறந்துவிடக் கூடாது!


Monday, 23 March 2015

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

முடி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உங்கள் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் முடி விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் தலைவாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான சடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக முடி அடர்த்தியாக மற்றும் நீளம் இல்லாமல் இருப்பவர்கள்,ரொம்ப சொட்டையா இருப்பவர்கள், எனக்கு நல்ல தலை ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம். முதலில் அடர்த்தியான முடி உள்ளவர்கள்.

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த சடை போட்டாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான முடி தான். எண்ணெய், லோஷன் அது இதெல்லாம் இருந்தாலும் நாம் எண்ணெயின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம். மேல இருக்கும் படம் தேங்காய் எண்ணெய் போட்டு செஞ்ச சடை. அடர்த்தியா முடி – ஆனா குட்டையா முடி இருக்கவங்க , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது. அப்பறம் ரப்பர் பேண்ட் போட்டு கட்ட முடியாமயே போய்விடும். இல்லைங்க எனக்கு வழுவழுப்பான எண்ணெய்தான் வீட்டுல வாங்கித்தராங்கன்னு சொன்னா, ஏங்க, நீங்க ஐயோ பாவம். யூத்துன்னு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க கல்யாணமான பெருசுன்னு எல்லாரும் முடிவு செய்யலாம்.
நடுவில் சொட்டை சுத்தியும் முடி உள்ளவர்கள்.
இவர்களும் வழுவழுப்பான எண்ணெய்களை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. அதற்குப்பதில் சொட்டையில் கண், மூக்கு வரைந்தால், அலுவலகத்தில் பாஸை ஏமாற்றி தூங்க வசதியாயிருக்கும். நன்கு தூங்குபவர்கள் குறட்டையை தவிர்க்கவேண்டும். நான் முழு சொட்டையும் இல்ல முழு மொட்டையும் இல்ல , ஆனா தலையில பர்ஃபெக்ட் ஆன முடி வட்டம் இருக்குன்னு வருத்தப்படறீங்களா! இதற்கெல்லாம் காரணம் நீங்க சரியா வட்டத்தை மறைக்க சடை போடாததே. இந்த கீழ இருக்க டிசைன் போடுங்க அலுவலகத்தில் தூங்கவும் வசதியாக இருக்கும். முக்கியமான விஷயம் ஆண்களின் மீசை. மூக்கிற்கு கீழ் மீசை வைக்காவிட்டாலும் தலையில் பின்னால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதே போல இளைஞர்களுக்கே உள்ள எண்ணம் , வித்தியாசமாக தலைக்கு கலர் அடித்துக்கொள்வது. முடிக்கு தகுந்த மாதிரி கலர் அடித்துக் கொண்டால், உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் சிகப்பு க்கலரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்வார்கள். அதே போல ஒரு முக்கிய விஷயம், முடி விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின்பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்துவிட்டு வழக்கம்போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் முடி ஸ்டைல் தேர்வு உட்பட. நான் கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமானது தலைக்கு மேல என்ன இருக்குங்கறதை விட தலைக்கு உள்ள என்ன இருக்கு என்பதுதான்.
பின் குறிப்பு:
மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு முடி உள்ளவர்களுக்கு மட்டுமே நமது முடி அழகை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், சொட்டையாக உள்ளவர்களுக்கு விக்கை தவிர வேறு வழி இல்லை.


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்-2

தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள் தான். தேவையான பொருட்கள்: 1. தண்ணீர் – 2கப் [அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்] தண்ணீரை சேமியுங்கள். 2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது, சகோதரிகளிடமிருந்து வேண்டாம் [முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்] 5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity. கவனிக்க வேண்டியவை: ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும், இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை. 1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும் [மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.] 2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம். 3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு.. உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது. செய்முறை: அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும் ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும், இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும், ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும். உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக நுரை நீங்கும் வரை கழுவவும், ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும். எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும். ஏ. சீப்பை எடுத்து வாரவும். ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும். எப்பொழுது முகம் கழுவது நல்லது: 1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம் 2. கல்யாணமானவர்கள், காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம் கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம். 3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது 20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும். வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்.. முக அழகுக்கு: பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள். சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும். தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும். முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும். உதடுக்கு: சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை) பற்களுக்கு: எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். கூந்தலுக்கு; தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும் வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம். உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும் இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும். முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம் ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும். நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும் ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்.. உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது. கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள் டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும். இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது. வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க. உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க...


சரும நிறம் மாறி பளீச் அழகு பெற.....

இத்தலைமுறையினர் வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள். பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்.... சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும். புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம் முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


சருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...

சருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...

சருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்... பச்சைப் பயறு - 250 கிராம் மஞ்சள் - 100 கிராம் வசம்பு - 10 கிராம் எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும். முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு... முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு... கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.


Saturday, 21 March 2015

மற்றவர்களை கவர்வதற்கு..!!!

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். ஆண்களை கவரும் பெண்கள் பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர். இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள் ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும். முத்தம் சிந்தும் உதடுகள் அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம். பந்தா இல்லாத ஆண்கள் சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்

சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும். பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும். முகம் வரட்சியினை போக்க: கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம். ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்். கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு. இப்போது ஆடைகளை பற்றி பார்ப்போம் ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும். நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும் ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள் டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும். வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க . ,மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு…. ஆகையால் இனிமையான பேச்சுங்க, சிரித்தமுகத்துடன் இருங்க நீங்க அழகா இருப்பிங்க.